நேற்று இரவு(13.08.2025) சென்னை ரிப்பன் மாளிகை முன்பு நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை கலைக்கும் நடவடிக்கையை சென்னை பெருநகர காவல்துறை மேற்கொண்டது.
சென்னை காவல்துறையின் கைது நடவடிக்கையில் தொழிற்சங்கத் தலைவர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.
இதில் பல்வேறு அரசியல் செயற்பாட்டாளர்கள் தற்போது வரை எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்கிற தகவல் இதுவரை கிடைக்கவில்லை(எ.கா. வழக்குரைஞர் புளியந்தோப்பு மோகன், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முத்துச்செல்வம், வழக்குரைஞர் நிலவுமொழி, பொதுநல மாணவர் எழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் வளர்மதி உள்ளிட்டோரும் இன்னும் அடையாளம் தெரியாத பலரும்) என கூறப்படுகிறது.
தற்போது வழக்குரைஞர் நிலவுமொழி மற்றும் வளர்மதி ஆகியோர் சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்குரைஞர் நிலவுமொழி அவர்களின் கை காவலர்களால் உடைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசு தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு, சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டுமெனவும் மனித உரிமை மீறல்களிலும், சட்டவிரோதமாகவும் நடந்து கொண்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.
– ஜா.ஜோஸ் ஃப்ரீட்
ஒருங்கிணைப்பாளர்,
நீதிக்கான கூட்டியக்கம்.
