கடலூர் மாவட்ட பரங்கிப்பேட்டையில் 07.01.2025 அன்று பாத்திமா என்பவர் வீட்டில் குழந்தை பெற்றதற்காக அவரது வீட்டிற்கு சுகாதாரத் துறையினரும், காவல்துறையினரும் சென்று மருத்துவமனைக்கு வர வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.
ஒவ்வொருவரும் தாம் எந்த மருத்துவமுறையை பின்பற்ற வேண்டும் என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது, இந்திய அரசமைப்பு சட்டப் பிரிவுக் கூறு 21 இதை உறுதி செய்கிறது. ஆனால் சுகாதாரத் துறையினரும், காவல்துறையினரும் இதை தொடர்ந்து மீறும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு வீட்டுப் பிரசவத்தில் பாதுகாப்பாக குழந்தை பெற்றெடுக்கும் பெற்றோரை அச்சுறுத்தும் அதிகாரிகள் தமிழ்நாடு அரசு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நீதிக்கான கூட்டியக்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.